மாநில செய்திகள்

அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லைஅதிகாரிகள் தகவல் + "||" + Athivaratar Darshan location No change

அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லைஅதிகாரிகள் தகவல்

அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லைஅதிகாரிகள் தகவல்
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 16-வது நாளான நேற்று அத்திவரதர் ரோஜா நிற பட்டாடையில் தாமரை மலர் மாலை மற்றும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார்.

அத்திவரதரை தரிசிக்க நேற்று அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேறு இடத்திற்கு மாற்றம் இல்லை

பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அத்திவரதர் தரிசன இடம் வசந்த மண்டபத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு பக்தர்களிடையே நிலவியது.

இது குறித்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் கேட்டபோது:-

அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை என்றனர்.

நேற்று அத்திவரதரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், நடிகர்கள் ராதாரவி, தாமு, நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.