ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 17 July 2019 7:31 AM GMT (Updated: 17 July 2019 7:31 AM GMT)

ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை

சட்டசபை விதி எண் 110ன் கீழ்  முதல்அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் உருவாக்கப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு.

* 50 கோடி ரூபாய் செலவில் 10 போக்குவரத்து பணிமனைகள் நவீனப்படுத்தப்படும்.

* கரூரில் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.

* இந்தாண்டு 2,000 புதிய பேருந்துகள் ரூ.600 கோடி மதிப்பில் வாங்கப்படும்.

* 296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* 32 மாவட்டத்தில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உலக தரம்வாய்ந்த தீவிர சிகிச்சை மையம்.

* ஈரோடு அரசு மருத்துவமனை ரூ.67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என கூறினார்.

Next Story