மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்... + "||" + aththivarathar gather to pay their respects ...

அத்திவரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...
அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.
காஞ்சீபுரம் 

40 நாட்கள் நடைபெறும் காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 18 ஆம் நாளான இன்று  அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலானோர் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.  மக்கள் வாகனங்களை நகர் பகுதியில் கொண்டு வந்ததால், காஞ்சீபுரம் காந்தி சாலை பெருமாள் கோவில் அருகே, காஞ்சீபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லக்கூடிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.