வேலூர் மக்களவை தேர்தல்: கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு


வேலூர் மக்களவை தேர்தல்: கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 19 July 2019 7:34 AM GMT (Updated: 19 July 2019 11:44 AM GMT)

வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வேலூர், 

கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை அடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட  வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உள்ளிட்ட பலர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான் சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதிநாளில் 17 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது பணப்பட்டுவாடா புகார் இருப்பதால், அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, ஏ.சி சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.


Next Story