மாநில செய்திகள்

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு + "||" + Vellore: DMK candidate is ADMK alliance candidate Accept nomination papers

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுதாக்கல்  நேற்றுடன் முடிவடைந்தது. 

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதிநாளில் 17 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அதுபோல் வேறு கட்சியை சேர்ந்தவர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம்பி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என கனிமொழி எம்பி கூறினார்.
2. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
3. வேலூர் மக்களவை தொகுதி : கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. நொடிக்கு... நொடி... மாறும் நிலவரம் பதட்டத்தில் வேட்பாளர்கள் ; ஏ.சி.சண்முகம் 13104 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
5. வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை