மாநில செய்திகள்

மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு + "||" + You thought of capturing the rule indirectly But nothing happened Palanisamy alleges DMK

மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு

மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை  திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு
மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை என திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
சென்னை

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசும் போது  கூறியதாவது:-

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்; சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்; 9 பெரிதா? 13 பெரிதா? என கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலினுக்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, 

உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர திட்டமிட்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் 9 இடங்களை மக்கள் எங்களுக்கு அளித்தார்கள் என கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை