காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி


காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 July 2019 11:19 AM GMT (Updated: 19 July 2019 11:19 AM GMT)

காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

சட்டசபையில்  காவல்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது காவல்துறையினரின் குறைகளை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் அளித்தார்.  மேலும் இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

* 14.75 கோடியில் 5 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 97.74 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

* 72,000 காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும்.

* காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 3000 ஆக உயர்வு.

* 4-வது காவலர் ஆணையம் அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.

* தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, தருமபுரி மாவட்டங்களில் ரூ.14.75 கோடியில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* ரூ.8.54 கோடியில் 1500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வழங்கப்படும்.

* ரூ.1 கோடி செலவில் 50 ஆளில்லா விமானங்கள், டிரோன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் வாங்கப்படும் .

* 14 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள், மெரினாவில் மீட்பு பணிகள் நிலையம் ரூ. 17. 25 கோடியில் அமைக்கப்படும். 

* 4 மீட்டர் உயரம் கொண்ட வான்நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய ஊர்தி ரூ. 121 கோடியில் வாங்கப்படும். 

* சென்னை வேப்பேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்  என கூறினார்.

Next Story