சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் என்.ஐ.ஏ சோதனை


சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் என்.ஐ.ஏ சோதனை
x
தினத்தந்தி 20 July 2019 6:25 AM GMT (Updated: 20 July 2019 6:25 AM GMT)

சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை

கடந்த இரண்டு மாதங்களாக என்ஐஏ நடத்தி வரும் இந்த விசாரணையில் கடந்த வாரம் டெல்லியில் 14 பேர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பத்து நாட்கள் காவலாளர்கள் பிடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நீதிமன்றம் பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. 

கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென பெரம்பலூர் லெப்பைக்குடிகாட்டில் குலாம்நபி ஆசாத் எனபவர் வீட்டில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், நாகை நெல்லையில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story