சென்னை இன்று ஊட்டிபோல் இருக்கும்; இடையிடையே லேசான மழை -தமிழ்நாடு வெதர்மேன்


சென்னை இன்று ஊட்டிபோல் இருக்கும்;  இடையிடையே லேசான மழை -தமிழ்நாடு வெதர்மேன்
x
தினத்தந்தி 22 July 2019 5:30 AM GMT (Updated: 22 July 2019 5:30 AM GMT)

சென்னையின் வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்து உள்ளார்.

சென்னை

பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கேரள பருவமழை காரணமாக தமிழகத்திலும் சாரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தென் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்துள்ளது. ஊட்டியைப் போன்ற குளிர்ச்சியான சூழலில், சென்னையில் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும். இதற்கிடையில் சாரல் முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும். 

இன்று மாலை, இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நல்ல மழை பெய்யும். இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 46 மி.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் குறைந்தபட்சமாக 8 மி.மீ மழை பெய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story