கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீது பதிவு செய்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2019 9:30 PM GMT (Updated: 23 July 2019 8:16 PM GMT)

கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

போராட்டம்

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 140-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு ரத்து

இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஆனால் போராட்டத்தின்போது போலீசாரின் வாகனத்தை உடைத்ததாக சிலர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Next Story