மாநில செய்திகள்

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார் + "||" + Nalini was released from Vellore jail on a month's parole.

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்குகிறார்.
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக வியாழக்கிழமை காலை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 

இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமைக்குள் அவர் பரோலில்  விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக  நளினியை பரோலில் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் இன்று வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல் அளிக்கப்பட்டு உள்ளது. 24 மணிநேர பாதுகாப்புடன் பரோல் காலத்தில் நளினி இருப்பார் என்ற கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனு மீது நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய நளினியின் மனு மீது, ஜூன் 11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் நளினி ‘ரிட்’ மனு தாக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் 7 பேர் தங்களது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.