திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 25 July 2019 7:37 PM GMT (Updated: 2019-07-26T01:07:54+05:30)

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி, 

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு மலர் காவடிகள் செலுத்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

விழாவையொட்டி மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டது.

அன்னதானம்

அதேபோல கோவிலில் உள்ள காவடிமண்டபத்தில் சிறப்புஉற்சவர் சன்னதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த மலர் காவடிகளை செலுத்தி பக்தியுடன் வழிபட்டனர்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வீதியில் கரகாட்டம், காவடிஆட்டம், சிலம்பாட்டம் ஆடியபடி பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்று சாமிதரிசனம் செய்தனர். விழாவையொட்டி திருத்தணியில் பலவேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story