மதுரை அரசு மருத்துவமனைக்குள் மீன் வியாபாரம்?


மதுரை அரசு மருத்துவமனைக்குள் மீன் வியாபாரம்?
x
தினத்தந்தி 26 July 2019 11:56 AM IST (Updated: 26 July 2019 11:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2-வது மாடி வரை மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை

தென் தமிழகத்தின் முக்கிய உயர்சிகிச்சை மையமாக இருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், மேல்தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி வந்து, மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல் தளங்களுக்கு செல்லும் ஓடுதளங்கள் வழியாக மீன் கடைக்காரர் இருசக்கர வாகனத்தில் சென்று மீன் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம் காக்க வேண்டிய மருத்துவமனையில், மீன் விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story