தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவு -சென்னை வானிலை மையம்


தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவு  -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 26 July 2019 7:51 AM GMT (Updated: 2019-07-26T13:21:22+05:30)

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வடதமிழகம், தென்தமிழகத்தில் மழைக்கு  வாய்ப்பு  உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என கூறினார்.

Next Story