தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா? என தெரியவில்லை - கனிமொழி எம்.பி


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா? என தெரியவில்லை - கனிமொழி எம்.பி
x
தினத்தந்தி 27 July 2019 6:37 AM GMT (Updated: 2019-07-27T12:07:08+05:30)

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என தெரியவில்லை திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

நெல்லை,

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது, விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. படுகொலைகள் மற்றும் ஆணவக் கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என தெரியவில்லை என கூறினார்.

Next Story