மாநில செய்திகள்

அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்: முதல்வர் பழனிசாமி + "||" + Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami lashes out at DMK, Stalin

அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்: முதல்வர் பழனிசாமி

அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்: முதல்வர் பழனிசாமி
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.
வாணியம்பாடி, 

வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “  ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

 மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக. 

இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். 

ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.  திமுகவின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு" என்றார்.