இன்று மதியம் 1 மணி வரையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்

இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 28-வது நாளான இன்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடி வருகிறது.
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். காலை 5 மணி முதலே அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் . இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் என ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story