திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது; ஸ்டாலினின் ராசி அப்படி - எடப்பாடி பழனிசாமி


திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது; ஸ்டாலினின் ராசி அப்படி  - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 28 July 2019 1:10 PM GMT (Updated: 2019-07-28T18:40:15+05:30)

திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பிரசார கூட்டத்தில் பேசுகையில் எதிர்க்கட்சியான திமுகவை விமர்சனம் செய்தார். இருக்கின்ற இடத்தில்தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவர்கள், வேலூரில் தேர்தலை நிறுத்த வேண்டும் என நாங்கள் முயற்சிக்கவில்லை.  வேலூரில் திமுகவினர் பதுக்கி வைத்திருந்த பணம் பிடிபட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் நாற்காலி மீது மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி என விமர்சனம் செய்த முதலமைச்சர் பழனிசாமி, திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவில் காங். ஆட்சியை இழந்தது; ஸ்டாலினின் ராசி அப்படியாகும். நாட்டை ஆழ்வதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர் என குற்றம் சாட்டினார். 

வேலூர் கே.வி.குப்பத்தில் முதலமைச்சர் பழனிசாமி மேலும் பேசுகையில், உண்மையை மறைத்து பொய் பேசி வாக்கு சேகரிக்கின்றனர் என்றார். தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாதம் ரூ. 6 ஆயிரம் தருகிறோம் என்று பொய் கூறி வாக்கு வாங்கியது திமுக. 100 நாள் வேலை திட்டம் தொடரும். ஆட்சியையும், கட்சியையும் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். 


Next Story