ஆடிப்பூரத்தையொட்டி மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ஆடிப்பூரத்தையொட்டி மேல்மருவத்தூரில்  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 30 July 2019 10:33 PM GMT (Updated: 30 July 2019 10:33 PM GMT)

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-திருச்சி (வண்டி எண்: 12653) செல்லும் ராக்போர்ட், எழும்பூர்-மதுரை(12635) செல்லும் வைகை, எழும்பூர்-மதுரை(12637) இடையே இயக்கப்படும் பாண்டியன், எழும்பூர்-செங்கோட்டை (12661) செல்லும் பொதிகை, எழும்பூர்-மன்னார்குடி(16179) இடையே இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-நாகர்கோவில்(16191) செல்லும் அந்தியோதயா ஆகியவை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.

* இதேபோல் மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர்(12654) இடையே இயக்கப்படும் ராக்போர்ட், மதுரை-எழும்பூர் (12636) இடையே இயக்கப்படும் வைகை, மதுரை-எழும்பூர்(12638) செல்லும் பாண்டியன், செங்கோட்டை-எழும்பூர்(12662) செல்லும் பொதிகை, மன்னார்குடி-எழும்பூர்(16180) இடையே இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-தாம்பரம் (16192) இடையே இயக்கப்படும் அந்தியோதயா ஆகிய ரெயில்களும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story