மாநில செய்திகள்

சென்னையில் 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கம் + "||" + Tamil Nadu: 526 teeth were removed from the lower jaw of a 7 year old boy at a hospital

சென்னையில் 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கம்

சென்னையில் 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கம்
சென்னையில் 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்கள் நீக்கப்பட்டு உள்ளன.
சென்னை,

சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 7 வயது சிறுவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளான்.  அவனது வலது புற கீழ் தாடையில் இருந்து 4க்கு 3 செ.மீட்டர் அளவிலான கட்டி ஒன்று நீக்கப்பட்டது.

இதன்பின் அங்கு அதிக அளவிலான பற்கள் இருந்துள்ளன என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து சிறுவனின் கீழ் தாடையில் இருந்து 526 பற்களை அவர்கள் நீக்கியுள்ளனர்.  முதலில் 3 வயதில் சிறுவனின் வாய் வீங்கியுள்ளது.  ஆனால் அவனது பெற்றோர் இதனை பற்றி கவலை கொள்ளவில்லை.  சிறுவனும் சிகிச்சை செய்ய ஒத்துழைக்கவில்லை.

இதன்பின்பு வீக்கம் பெரிய அளவிலானது.  இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  பின்னர் அறுவை சிகிச்சை செய்து உள்ளிருந்த கட்டி நீக்கப்பட்டது.  இதனை தொடர்ந்தே அதிக எண்ணிக்கையில் இருந்த பற்களையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.