நெல்லை முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை வழக்கு : திமுக பிரமுகர் சீனியம்மாள் தலைமறைவு
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் தலைமறைவாகி உள்ளார்.
சென்னை,
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறும் பணி நிறைவு செய்யப்பட்டு இன்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவுள்ளது.
நாளை அல்லது திங்களன்று கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் கார்த்திகேயனின் தாயாரும், தி.மு.க. பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகி விட்டார். எனவே, சீனியம்மாளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story