மாநில செய்திகள்

33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்... + "||" + 33 th day Athivarathar Temple Dharshan In Kanchipuram

33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...

33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...
நின்ற கோலத்தின் இரண்டாவது நாளான இன்று, கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார்.
சென்னை,

காஞ்சீபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 33-ம் நாளான இன்று, அத்திவரதர், கரும்பச்சை வண்ண பட்டு உடுத்தி, மல்லிகை, சம்பங்கி, செண்பக  மலர் மாலை அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். 

காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தரிசன வரிசை எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நெரிசல் இன்றியும், விரைவாகவும் சென்று தரிசித்து வருகிறார்கள்.

ஆடிப்பூரத்தையொட்டி, நாளை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரூ.16 லட்சம் நிதி உதவி வழங்கினார்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 154 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
2. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது
காஞ்சீபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட அனந்தசரஸ் குளம் நிரம்பி வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் கூட்டமாக வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
3. காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம்
காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
4. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தை பார்வையிட குவியும் பக்தர்கள்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்விடுமுறையையொட்டி, குளத்தை பார்வையிட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
5. 45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.