அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சீர்மிகு வகுப்பறைகள்’ திட்டம் குறித்த பயிற்சி
x
தினத்தந்தி 3 Aug 2019 1:30 AM IST (Updated: 3 Aug 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பள்ளிகளில் சீர்மிகு வகுப்பறைகள் (‘ஸ்மார்ட் கிளாஸ்’) திட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

இந்த திட்டம் மூலம் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த சீர்மிகு வகுப்பறைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்புகளில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நந்தன் சுதர்சனம், பல்லவி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் சீர்மிகு வகுப்பறைகளில் கொண்டு வரப்பட இருக்கும் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் பாடங்களை கற்பிக்க முடியும்? அவர்களுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப விவரங்களை கணினி வாயிலாக எப்படி எடுத்து சொல்வது? உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேசும்போது, ‘சீர்மிகு வகுப்பறைகள் திட்டத்தை சிறப்பான முறையில் அமல்படுத்துவதற்கு ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ‘அனைவருக்கும் கல்வி’ மாநில திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story