தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
பேரணாம்பட்டு,
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று குடியாத்தம், பேரணாம்பட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நீங்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போது கதிர்ஆனந்த் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. நான் அவரை பார்த்து சிரித்ததால் அவரது முதல்-அமைச்சர் பதவி போய்விட்டது.
நேற்று முன்தினம் ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் கருணாநிதியை அவமானப்படுத்துவதாக கூறி அப்துல்கலாமை அவமானப்படுத்தி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஜெயலலிதாவின் சாவில் உள்ள மர்மத்தை பற்றி வாய்திறக்கவில்லை, பேசவே இல்லை. ஆனால் பதவி போனவுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர் 40 நிமிடம் தியானம் செய்து ஜெயலலிதாவின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் ஜெயலலிதா சாவின் மர்மத்தை பற்றி வாயே திறக்கவில்லை. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் செல்லவில்லை.
தற்போது நாடாளுமன்றத்தில் துணை முதல்-அமைச்சரின் மகன் முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக பேசினார். அன்வர்ராஜா எம்.பி.யாக இருந்த போது முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் வேலூர் தொகுதி தேர்தலுக்காக எதிர்ப்பு தெரிவித்து மேல்சபையில் பேசுகிறார். வெளிநடப்பு செய்கிறார்.
வேலூர் தொகுதி தேர்தலுக்காக அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. இஸ்லாமிய மக்களிடம் இருந்து தி.மு.க.வுக்கு ஒரு பிளவு ஏற்படுத்த அ.தி.மு.க. முயற்சிக்கிறது. அது ஒரு காலத்திலும் நடக்காது.
தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும். தி.மு.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து, அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்காக ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை விசாரித்து அதற்கு காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி ஒரு விவசாயி என்கிறார். விவசாயி முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால் விஷவாயு முதல்-அமைச்சர் ஆகக்கூடாது. இந்த ஆட்சி எப்படி நடந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். சட்டம்-ஒழுங்கு நிலைமை உங்களுக்கு தெரியும். பொள்ளாச்சி, கோடநாடு விவகாரம் மக்களுக்கு தெரியும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளதால் தப்பித்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர்ஆனந்தை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நேற்று காலை குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமலாபுரம், சாத்தம்பக்கம், அயித்தம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

Related Tags :
Next Story