34-ம் நாள் அத்திவரதர் உற்சவம்; வரதருக்கு ரோஸ் நிற பட்டாடை அலங்காரம்
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 34-ம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சீபுரத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதால், வரதராஜ பெருமாள் கோவில் நடை மதியம் 2 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இக்கோவிலில் 34வது நாளான இன்று அத்திவரதர் பச்சை மற்றும் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு தரிசனம் தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வரதரை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடிப்பூரத்தையொட்டி, வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதால் தரிசன நேரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு, இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 44 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story