எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் ரூ.10 லட்சம் அபராதம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மருத்துவ தேர்வுக்குழு கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, கடந்த 1-ந் தேதி வரை நடந்து முடிந்து இருக்கிறது. இதில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக தேர்வுக்குழு அறிவித்தது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்பு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. மாணவர்கள் அனைவரும் 3-ந் தேதிக்குள் (நேற்று) கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதேபோல், பி.டி.எஸ். படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்பு கடந்த 2-ந் தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது.
மருத்துவ படிப்பை தேர்வு செய்து சேர்ந்துவிட்டு, பின்னர் இடைநின்றால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு அறிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக தேர்வுக்குழுவின் கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு, சுயநிதி கல்லூரிகள் மற்றும் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், 4-ந் தேதி (இன்று) மற்றும் 5-ந் தேதிகளில் (நாளை) இடைநின்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 6-ந் தேதியில் (நாளை மறுதினம்) இருந்து இடைநின்றால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பை தேர்வு செய்து, 5-ந் தேதி (நாளை) மற்றும் 6-ந் தேதி (நாளை மறுதினம்) இடைநின்றால் ரூ.1 லட்சமும், 7-ந் தேதியில் (புதன்கிழமை) இருந்து இடைநின்றால் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். 4-ந் தேதிக்குள் (இன்று) தங்களுடைய விருப்பத்தை தெரிவிப்பவர்களுக்கு அபராதம் கிடையாது.
இந்த அபராத தொகையை ‘செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’ என்ற பெயரில் வரைவோலையாக (டி.டி.) எடுத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘தேர்வு செய்யும் மருத்துவ படிப்பு பிரயோஜனம் இல்லாமல் போய்விடக்கூடாது என்ற நோக்கில் இந்த அபராத தொகை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்’ என்றார்.

Related Tags :
Next Story