தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? தேர்தல் கமிஷன் ஆலோசனை
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது.
சென்னை,
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதையடுத்து அவர் கடந்த மே 27-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
இந்திய தேர்தல் கமிஷனின் விதிமுறையின்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் சேர்த்து இந்த 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தினால் வாக்குப்பதிவு பாதிக்கும் என்பதால், அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளது.
எனவே 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story