மாநில செய்திகள்

வேலூர் தேர்தல்; காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்கு பதிவு + "||" + The Vellore election averaged 7.40% turnout as of 9am

வேலூர் தேர்தல்; காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்கு பதிவு

வேலூர் தேர்தல்; காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்கு பதிவு
வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர்,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.  இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.  இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே, குடியாத்தம் 6.79, அணைக்கட்டு 6.10, வாணியம்பாடி 6.29, வேலூர் 8.79, கே.வி. குப்பம் 8.85 மற்றும் ஆம்பூர் 7.76 சதவீதம் என்ற அளவில் வேலூர் மக்களவை தொகுதிகளில் அடங்கியுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் வாக்குகள் பதிவாகி உள்ளன.  வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-12.84 % நாங்குநேரி-18.04 % வாக்குகள் பதிவு
காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-12.84 %, நாங்குநேரி-18.04 % மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர்-9.66 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
2. வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.
3. வேலூர் தேர்தல்; வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை
வேலூர் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
4. வேலூர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.57 கோடி பறிமுதல்
வேலூர் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்ந்துள்ளது.
5. வேலூர் தேர்தல்; இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்
வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.