அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை ஐகோர்ட் உத்தரவு


அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2019 5:05 PM IST (Updated: 5 Aug 2019 5:05 PM IST)
t-max-icont-min-icon

தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 37 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, இவரது வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்.பி.  ரவீந்திரநாத் குமார் ஆகஸ்ட் 29-க்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Next Story