38வது நாள்: மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 38வது நாளான இன்று மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.
காஞ்சீபுரம்,
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.
அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 38வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story