மாநில செய்திகள்

அத்திவரதர் வைபவம்: காஞ்சீபுரம் நகர பள்ளி - கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை + "||" + Athivarathar ritual: Kanchipuram City School - For Colleges 13th, 14th and 16t Local holidays

அத்திவரதர் வைபவம்: காஞ்சீபுரம் நகர பள்ளி - கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை

அத்திவரதர் வைபவம்: காஞ்சீபுரம் நகர பள்ளி - கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

அத்திவரதரை தரிசிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க வரும் 17-ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 17-ஆம் தேதியான சனிக்கிழமை விடுமுறை தினம் என்ற நிலையில் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானக் கூடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே 7500 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் வரும் திங்கட் கிழமை முதல் மேலும் 5000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அத்திவரதர் வைபவம் குறித்து அத்திகிரி என்ற புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட ஓ.பன்னீர்செல்வம்  பெற்றார்.

கூட்டத்தில் அத்திவரதர் தரிசனத்தை யொட்டி காஞ்சீபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை விடுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
2. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தண்ணீர் லாரிகள்-இன்று முதல் வேலைநிறுத்தம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
3. அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்தார்.
4. 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்.
5. அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.