மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி : ஏ.சி. சண்முகம் 3896 வாக்குகள் முன்னிலை + "||" + Vellore Lok Sabha Election: AIADMK Alliance candidate AC Shanmugam leads by 3896 votes

வேலூர் மக்களவை தொகுதி : ஏ.சி. சண்முகம் 3896 வாக்குகள் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதி : ஏ.சி. சண்முகம் 3896 வாக்குகள் முன்னிலை
வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.  

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ஏசி சண்முகம் 245273  வாக்குகளும், கதிர் ஆனந்த  241377   வாக்குகளும்  நாம் தமிழர் கட்சி தீப லட்சுமி 12648 வாக்குகளும் பெற்று உள்ளனர். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3896  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது - பிரதமர் மோடி
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது 70 ஆண்டுகளாக நாடு சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என பிரதமர் மோடி கூறினார்.
2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்
அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
3. தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜக பிரசாரங்களை ஒளிபரப்பி வந்த நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
4. பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #AamAdmi
5. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? -தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.