மீன்பிடி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு


மீன்பிடி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 7:42 PM GMT (Updated: 9 Aug 2019 7:42 PM GMT)

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அராசாங்கங்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்,

இன்று ராமேஸ்வரத்தில் நடந்த மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மாநாட்டில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அராசாங்கங்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மூர்த்தி கூறியதாவது, “ மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இருந்தாலும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அவர்களால் இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.” என்று அவர் தெரிவித்தார்.


Next Story