காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்


காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Aug 2019 2:24 PM GMT (Updated: 10 Aug 2019 2:24 PM GMT)

காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்,

காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்.  காஷ்மீர் மக்களிடம் கலந்துரையாடி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

பாஜக அரசால் அரசியல் சட்டமும் அதன் நோக்கங்களும், அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

வீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெரும்பான்மையான மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story