நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Aug 2019 2:51 PM GMT (Updated: 11 Aug 2019 2:51 PM GMT)

நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்த பந்தலூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து  சேரன்பாடியில் வெள்ள நிவாரண முகாமில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பேன் என்றார்.

Next Story