மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது + "||" + Mettur dam inflow likely to touch 2.4 lakh cusecs

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
சேலம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியில் இருந்து 1.65 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து அணையின் நீர் மட்டம் 82.62 அடியாக உள்ளது.  அணையில் நீர் இருப்பு 44.61 டி.எம்சியாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது.  மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிரபார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் காவலாளி கொலை: 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேர் கைது
சேலத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரின் 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் அருகே தறி தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. சேலம் அருகே இளம்பெண் கொலை: கணவரின் நண்பர்கள் 4 பேர் கைது
சேலம் அருகே இளம்பெண் கொலையில் கணவரின் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனுக்கள் - வீரபாண்டி ராஜா வழங்கினார்
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனுக்களை வீரபாண்டி ராஜா வழங்கினார்
5. சேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்
சேலத்தில் 6-வது நாளாக அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.