மாநில செய்திகள்

காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை எச்.வசந்தகுமார் அறிக்கை + "||" + Government of Pa. Janata The economic downturn was not thinking about H. Report of Vasanthakumar

காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை எச்.வசந்தகுமார் அறிக்கை

காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை எச்.வசந்தகுமார் அறிக்கை
காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை என எச்.வசந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் செயல்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர், ராம ஜென்ம பூமி, மும்முறை தலாக் ஒழிப்பு, பன்னாட்டு முதலீட்டாளர்களை விரட்டியடிப்பது, ஜெய் ஸ்ரீராம் கோஷத்திற்கு முன்னுரிமை அளிப்பது போன்றவற்றின் பக்கமே பா.ஜனதா அரசின் கண்ணோட்டம் செல்கிறது.


பொருளாதார சீரமைப்புக்கு முன்னுரிமை அளித்த பின்னரே பா.ஜனதா மற்றும் ஜன சங்க அமைப்புகளின் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் பக்கம் பா.ஜனதாவின் கண்ணோட்டம் திரும்பி இருக்க வேண்டும்.

இந்தியாவின் பரப்பளவில் 5 சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கிய காஷ்மீர் பக்கம் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு 95 சதவீதம் பரப்பளவு கொண்ட இந்திய பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிறிதும் சிந்திக்காமல் இருப்பது சரியல்ல. காஷ்மீர் பற்றிய முடிவுகளாக இருந்தாலும் சரி, இந்தியாவின் மற்ற பரந்த பகுதிகள் பற்றிய முடிவுகளாக இருந்தாலும் சரி, பா.ஜனதா அரசின் போக்கு வேலைவாய்ப்பு இன்மையை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை பாதிப்புக்கு உள்ளாக்கும் மக்கள் விரோத செயல்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி
பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க, சந்திரபாபு நாயுடு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.