மாநில செய்திகள்

தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது + "||" + Continuous climb One pound of gold Approaching Rs.29 thousand

தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது

தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு பவுன் தங்கம்  ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது.
சென்னை,

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக் கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.


கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.

ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ(புதன்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.293-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 344-ம் உயர்ந்து இருக்கிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளி விலையும் அதிகரித்து இருந்தது.

நேற்று மாலையில் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.