மாநில செய்திகள்

தமிழக அரசு புதிய திட்டம்- இந்தியாவில் முதன்முறையாக எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி + "||" + Tamilnadu Government New Program - Free Vaccination for Underweight Children in India for the First Time

தமிழக அரசு புதிய திட்டம்- இந்தியாவில் முதன்முறையாக எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

தமிழக அரசு புதிய திட்டம்- இந்தியாவில் முதன்முறையாக எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி
நாட்டிலேயே முதன்முறையாக குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
கோவை,

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமோ காக்கல் மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

விழாவில் அவர் பேசியபோது,  “இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நிமோகாக்கல் ஊசி போடப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஊசியின் விலை ரூ.4 ஆயிரம். 4 ஊசிகள் போடப்பட வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் வாங்கப்படுவதில்லை” என்று அவர் தெரிவித்தார். 

ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உள் உறுப்புகள் போதிய வளர்ச்சி இன்றி காணப்படும். குறிப்பாக நுரையீரல்  பாதிப்பு அடைந்திருக்கும் என்பதால் குழந்தைகள் சுவாசிப்பதற்கு சிரமம் கொள்ளும். இதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக காணப்படும். இதில் நுரையீரல் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக நிமோ காக்கல் தடுப்பூசி குழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மற்றும் 15-வது மாதம் என 4 முறை போடப்படும். 


தொடர்புடைய செய்திகள்

1. அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
சிவகளை, கொடுமணல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பாலு எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
2. தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்
தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.
3. தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்து, நவீன வசதிகள் ஏற்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4. மேயர் பதவிக்கு மறைமுகத்தேர்தல் ஏன்? தமிழக அரசு விளக்கம்
மேயர் பதவிக்கு மறைமுகத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5. மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.