காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய சைலேந்திரபாபு உள்பட 16 பேருக்கு முதல்-அமைச்சர் விருது ; தமிழக அரசு அறிவிப்பு


காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய சைலேந்திரபாபு உள்பட 16 பேருக்கு முதல்-அமைச்சர் விருது ; தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 11:51 PM GMT (Updated: 14 Aug 2019 11:51 PM GMT)

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட 16 பேர் முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவர்.

பொதுமக்களின் சேவை, புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட 16 பேர் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்டு சிறந்த பொதுச் சேவைக்கான முதல்-அமைச்சர் விருதுக்கு செ.சைலேந்திரபாபு (ரெயில்வே டி.ஜி.பி.), ப.கந்தசாமி (கூடுதல் டி.ஜி.பி., நிர்வாகம்), ஆர்.தினகரன் (கூடுதல் போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு பிரிவு, சென்னை வடக்கு), ஜா.நாகராஜன் (இன்ஸ்பெக்டர், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையம், சேலம் மாநகரம்), சி.செந்தில்குமார் (இன்ஸ்பெக்டர், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம்), சா.டெய்சி (ஏட்டு, மனநிலை காப்பக போலீஸ் நிலையம், சென்னை கிழக்கு மண்டலம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புலன் விசாரணையில் முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக முதல்-அமைச்சர் விருதுக்கு எஸ்.வனிதா (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமல்பிரிவு, மதுரை), டி.புருஷோத்தமன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, போதை பொருள் தடுப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை), எஸ்.கிருஷ்ணன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, திட்டமிட்ட குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை, சேலம் மாநகரம்), வ.அசோகன் (துணை போலீஸ் சூப்பிரண்டு, மன்னார்குடி உட்கோட்டம், திருவாரூர் மாவட்டம்).

எஸ்.கிரிஸ்டின் ஜெயசில் (இன்ஸ்பெக்டர், பல்லாவரம் போலீஸ் நிலையம், சென்னை), ப.காசிவிஸ்வநாதன் (இன்ஸ்பெக்டர், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையம், சென்னை), ஏ.ஞானசேகர் (இன்ஸ்பெக்டர், தில்லைநகர் போலீஸ் நிலையம், திருச்சி மாநகரம்), கோ.அனந்தநாயகி (இன்ஸ்பெக்டர், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, கோவை), து.நடராஜன் (இன்ஸ்பெக்டர், ஒரகடம் போலீஸ் நிலையம், காஞ்சீபுரம் மாவட்டம்), பி.தேவி (இன்ஸ்பெக்டர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, நெல்லை மாநகரம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story