வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு


வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 3:49 AM GMT (Updated: 15 Aug 2019 4:05 AM GMT)

இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9 மணி அளவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்ற பின்பு, தேசியக்கொடியை முதல் அமைச்சர் பழனிசாமி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

இதையடுத்து, உரையாற்றிய முதல் அமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-  இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது.  இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம்.   பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது.  தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்ல பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.  வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது போல் நீர்மிகை மாநிலமாக விரைவில் உருவாகும். 

திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயம். கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.

Next Story