தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது!!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது!!
x
தினத்தந்தி 16 Aug 2019 12:16 PM GMT (Updated: 16 Aug 2019 12:16 PM GMT)

22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.28,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 2 மாதங்களில் வரலாறு காணாத உயர்வை சந்தித்து இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ரூ.26 ஆயிரம் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2-ந் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-ஐ கடந்தது.

அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, கடந்த 7-ந் தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. அதற்கு அடுத்த 5 நாட்களில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சரிவை சந்தித்தது. பவுனுக்கு ரூ.392 குறைந்து, ஒரு பவுன் மீண்டும் ரூ.28 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

விலை குறைந்த மறுநாளே நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில்,  இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ. 28, 664 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 3,583க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.29 குறைந்துள்ளது.  சென்னையில் வெள்ளி கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.48 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை தற்போது சற்று குறைந்துள்ளது சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story