மாநில செய்திகள்

தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை + "||" + school, colleges leaves for vellore district

தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இரவு தொடங்கிய விடிய விடிய கொட்டியது. இதனால், நகரின் முக்கிய  சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இந்த நிலையில், தொடர் மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.