மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + In the next 24 hours in Tamil Nadu, New Delhi Opportunity for rain Chennai Meteorological Department

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும். வேலூர், திருவண்னாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும். சென்னை மேகமூட்டமாக  காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என கூறினார்.