மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை உயர்வு - தமிழக அரசு உத்தரவு + "||" + Milk procurement in Tamil Nadu Tamil Nadu government orders price hike

தமிழகத்தில் பால் விலை உயர்வு - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பால் விலை உயர்வு -  தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பால் விலை, மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைப்பால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது.  ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

இந்த பால்விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பதப்படுத்தும் செலவு மற்றும் போக்குவரத்து செலவு, அலுவலக செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.