தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை
x
தினத்தந்தி 18 Aug 2019 3:11 AM GMT (Updated: 18 Aug 2019 3:11 AM GMT)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது.  சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் மற்றும் காஞ்சீபுரம் பகுதிகளிலும் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.  காஞ்சீபுரத்தில் பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் கனமழையும், பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு மற்றும் ராமாபுரம் பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, திண்டிவனம் பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு மற்றும் வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, பாகலூர், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் புதுச்சேரி நகரம், காலாபேட் பகுதிகளில் கனமழையும், திருபுவனை, வில்லியனூர், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தும் வருகிறது.

Next Story