மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு + "||" + 2,000 fishermen chased by Sri Lankan Navy

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.
ராமேஸ்வரம்,

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

அந்த வழியே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்தனர் என கூறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.  அதனுடன் படகுகளில் சென்ற 2 ஆயிரம் மீனவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.