மாநில செய்திகள்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் + "||" + In the evening or night time in Chennai Chances of thunderstorms and milder showers Weather Center

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர், ஆம்பூரில் தலா 12 சென்டி மீட்டர், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மதுரை விமான நிலையத்தில் தலா 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை மையம்
15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறி உள்ளது.
3. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகம்-புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.