மாநில செய்திகள்

கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி + "||" + Eye Eyelid Like insulation To farmers ’watersheds To be safe -Chief Minister Palanisamy

கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இரண்டாவது நாளாக நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உடலுக்கு உயிர் முக்கியமானது போல், விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் ஆகும். கண்ணை இமை  காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மழை நீர் வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2019-20ல் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் தொடங்கி உள்ளன. விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழு மூலம் இந்த பணிகள் நடைபெறுகின்றன. 

குறை தீர்ப்பு திட்டத்தில் பலர் மனைப்பட்டா கேட்டும், பட்டா மாறுதல்  கேட்டும் விண்ணப்பம் அளிக்கின்றனர். தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும். தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பட்டா இருந்தும் வீடுகள் அற்றவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது -முதல்வர் பழனிசாமி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. சொந்த கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
3. காந்தியின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் : டெல்லிக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
4. சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
5. தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது: மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது என்றும், மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.