மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணம்; சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஆலோசனை + "||" + Travel overseas; CM discusses at the Chief Secretariat in Chennai

வெளிநாட்டு பயணம்; சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஆலோசனை

வெளிநாட்டு பயணம்; சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்திற்கு முன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வருகிற 28ந்தேதி முதல் செப்டம்பர் 7ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவர் வெளிநாட்டில் உள்ள காலகட்டத்தில் அவரது பொறுப்புகள் வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படாது.  முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையொப்பமிடப்பட்டு பேக்ஸ் வழியே அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்திற்கு முன், சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி. சம்பத், காமராஜ் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தொழில் துறை ஆய்வு கூட்டத்தில், பொருளாதார மந்த நிலை குறித்தும் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் டி.ஐ.ஜி. ஆனி விஜயா வியாபாரிகளுக்கு ஆலோசனை
கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
2. அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
3. கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து கவர்னருடன் மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து கவர்னருடன் மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை நடத்தினார்.
4. கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் நேற்று திறக்கப்பட்டன. 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
5. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டை அகற்றும் நடவடிக்கை தளவாய்சுந்தரம், அதிகாரிகளுடன் ஆலோசனை
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டை அகற்றும் நடவடிக்கை குறித்து தளவாய் சுந்தரம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.